ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதை கண்டித்து 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்கள் பெற்றோர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
     
திருப்பூர் பிச்சம்பாளையம் அரசு துவக்கப் பள்ளியில் ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதை கண்டித்து 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்கள் பெற்றோர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஏற்கனவே ஆசிரியர் பற்றாக்குறை இருந்து வந்த நிலையில், ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டதாக ஆசிரியை ஒருவரை தற்போது இடமாற்றம் செய்துள்ளதாக கூறுகின்றனர். இது குறித்து,  பள்ளி கல்வித் துறையின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக போலீசார் உறுதியளித்ததால் போராட்டத்தை  கைவிட்டனர்.