புதுக்கோட்டை,பிப்.20:புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்  அமைந்துள்ள தேர்வுக் கூட அரங்கில் வருவாய் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றது.
  கலைத்திருவிழாவினை  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசும்போது கூறியதாவது :கலைத் திருவிழா ஆனால் இங்கு நடைபெறுவது  கலைகளுக்கே திருவிழா..மனிதன் ஒருவன் மட்டுமே சிரிக்க,ரசிக்க தெரிந்தவன் ஆவான் . மனிதன் தன்னுடைய பண்புகளின் வெளிப்பாடாக கலைகளை தோற்றுவித்தான்.குழந்தை பிறந்தது எனில் தாலாட்டு பாடல்,கோவில் விழா என்றால் விழாப் பாடல் பாடினார்கள்.
மேலும்
விளையாட்டினை விளையாடும் போதும்  பாடல்களை பாடி கொண்டே விளையாடினார்கள்.ஒவ்வொரு நிமிடமுடம் ரசனையுடன  வாழ்ந்து பழகினார்கள்.மேலும் இங்கு கலைத்திருவிழாவிற்கு வந்துள்ள நீங்கள் அனைவரும் பல காலம் செய்துள்ள உழைப்பின் பலனால் இங்கு வந்துள்ளீர்கள்.முழுமையான ஈடுபாடு இருந்தால் நீங்கள் எதிலும் வெற்றி பெறலாம்.மாணவர்கள் படிப்பு,விளையாட்டுடன்  கலைகளிலும் விருப்பத்துடன் செயல்பட்டால் வெற்றி பெறலாம்.எனவே நீங்கள் உங்களை முழுஈடுபாட்டோடு தயார்படுத்தி கொண்டு அனைத்து வகையான போட்டியிலும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டும்..உங்களது சொல்,செயல்,திறன்  புதுக்கோட்டை மட்டும் அல்ல தமிழகமே திரும்பி பார்க்கும்  வகையில் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் அண்ணாமலைரஞ்சன்,இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் க.குணசேகரன்,அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.அமுதாராணி,மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சி.பழனிவேலு, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் உதவி திட்ட அலுவலர் இரா.இரவிச்சந்திரன்,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் ரெ.ஜீவானந்தம்,இரா.கபிலன் மற்றும் பள்ளிகல்வி துணை ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

கலைத்திருவிழாவில் புதுக்கோட்டை ,இலுப்பூர்,அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையினை வெளிப்படுத்தினார்கள்.