தேனி:'10ம் வகுப்பு தமிழ் முதல்தாள் தேர்வு எளிமையாக இருந்தது. அதனால் அதிக மதிப்பெண் அள்ளலாம்,'என, தேனி மாணவர்கள் தெரிவித்தனர்.அவர்கள் கூறியதாவது:

எதிர்பார்த்தவை கே. சுதர்சனா, கம்மவார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தேனி:புத்தகத்தின் பின் பகுதியில் உள்ள , எதிர்பார்த்த வினாக்கள் வந்ததால் எளிதாக இருந்தது. இரு மதிப்பெண் பகுதியில் 26வது வினாவில் பதிலையே வினாவாக கேட்டிருந்தனர். இதனால் லேசான குழப்பம் ஏற்பட்டது. ஐந்து மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தது.
8 மதிப்பெண் வினாவும் புத்தகத்தின் பின்பகுதியில் இருந்தே கேட்கப்பட்டது. நன்றாக படிக்கும் மாணவர்கள் 99 மதிப்பெண் வரை பெறலாம்.
யோசிக்க வைத்தது பி.யோகேஷ்வரன், நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி, தேனி:வினாத்தாள் மிக, மிக எளிதாக இருந்தது. புத்தகத்தில் உள்ள மதிப்பீட்டு வினாவை நன்கு படித்தவர்கள் நல்ல மதிப்பெண் பெற முடியும். ஒரு மதிப்பெண் பகுதியில் 2வது வினா சற்று குழப்பும் வகையில் இருந்தது. அதே போல் சிறுவினா பகுதியில் 37 வது வினா குழப்பும் வகையில் கேட்டிருந்தனர். யோசித்து எழுதும் வகையில் இருந்தது. மனப்பாட பகுதி எளிமை. எதிர்பார்த்த வினாக்கள் வந்தது மகிழ்ச்சி.
விரைந்து விடையளித்தேன்வி.டி.பாலஸ்ரீஅபிராமி, அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி, பெரியகுளம்: உரிய விடையை தேர்ந்தெடுத்தல், கோடிட்ட இடத்தை நிரப்புக, ஒரு மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் புத்தகத்தில் இருந்தே கேட்கப்பட்டன. நான்கு மதிப்பெண் பொருத்துக வினாக்கள் மிக எளிதாக இருந்தது. வினாக்கள் என அனைத்துமே எளிதாக இருந்தது. புத்தகத்தை முழுமையாக படித்ததால் பயன்பெற முடிந்தது. காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் நன்கு படித்ததால் வினாக்களுக்கு, விரைந்து விடையளிக்க முடிந்தது.
எளிமைசெ.சுவாதி, என்.எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளி, கூடலுார்: அதிகமான வினாக்கள் புத்தகத்தில் இருந்தே கேட்கப்பட்டன. வெளியில் இருந்து ஒரு சில வினாக்கள் கேட்கப் பட்டாலும், அது புத்தகத்தில் உள்ள பாடத்தை பின்பற்றியே இருந்தது. அனைத்து வினாக்களும் மிகவும் எளிதாக இருந்தது. சுமாராக படிப்பவர்கள்கூட அதிகமான மதிப்பெண் பெறலாம். படப்பிடிப்பு கருவியை கண்டுபிடித்தவர் யார் என்ற வினா, சரியான இடத்தில் சேர்க்க என்ற பகுதியில் வரும். ஆனால் அது கோடிட்ட இடத்தில் நிரப்புக என்ற பகுதியில் கேட்கப்பட்டிருந்தது. வகுப்புகளில் நடத்தப்படும் பாடங்களை புரிந்து படித்ததால், அனைத்து வினாக்களுக்கும் பதில் எழுத வாய்ப்பாக இருந்தது.
தோல்விக்கு வழியில்லைபி.இளங்கோவன், தமிழாசிரியர், கம்மவார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தேனி:ஏற்கனவே மாணவர்களுக்கு பலமுறை பயிற்சி அளித்த வினாக்கள் அதிகம் வந்திருந்தன. அதே போல் முந்தைய வினாத்தாளில் இருந்தும் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. அதனால் எளிதாக தேர்வை எழுதியிருப்பார்கள்.ஒரு மதிப்பெண் வினாவில் ஒரு வினா குழப்பத்திற்கு காரணம் அதனை பொருத்துக பகுதியில் பயிற்சி செய்து இருப்பார்கள். கடின வினாத்தாளாக இல்லாமல் எளிதாக இருந்தது. நன்றாக படிக்கும் மாணவர்கள் 99 மதிப்பெண் வரை பெறலாம். தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவார்கள்.

No comments:

Post a Comment