7 மையங்களில் சி.ஏ., பயிற்சி'

கோபிசெட்டிபாளையம்:''பிளஸ் 2 தேர்வு முடிந்ததும் 2000 மாணவர்களை தேர்வு செய்து ஏழு மையங்களில் சி.ஏ. பயிற்சி அளிக்கப்படும்'' என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு துவங்கி நடந்து வருகிறது. மாணவர்கள் அச்சமின்றி தைரியமாக தேர்வை சந்திக்கும் அளவுக்கு ஆசிரியர்கள் பயிற்சி அளித்துள்ளனர்.

பிளஸ் 2 தேர்வு முடித்ததும் சி.ஏ. பயிற்சியளிக்க 2000 மாணவர்களை தேர்வு செய்து 20 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். தமிழகத்தில் ஏழு மையங்களில் ஐந்து சீனியர் ஆடிட்டர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும். மதுரை, வேலுார், திருச்சி, கோவை, சென்னை உள்ளிட்ட ஏழு மையங்களில் பயிற்சி அளிக்கப்படும், என்றார்.

No comments:

Post a Comment