*உலக மகளிர் தின வரலாறு!*

*இன்றும் பெருவாரியான பெண்கள் மகளிர் தினத்தில் வீரம் செறிந்த வரலாற்றைப் பற்றியும் பெண்ணுரிமை என்னும் சொல்லாடலின் ஆழ்ந்த அர்த்தத்தையும் அறியாமலே இருப்பது இன்று நம்மை வருத்தத்திற்கு உள்ளாக்குகிறது!*

*இன்னொரு பக்கம் ஆளும் வர்க்கப் பிழைப்புவாத அமைப்புகள் இந்நாளைக் கொச்சைப்படுத்திக் கோலப் போட்டி, சமையல் போட்டி, அழகிப் போட்டி, நடனம், குத்தாட்டம் என அறியாமை இருள் நிரம்பிய நுகர்வு கலாச்சார வெறியிலும் ஆழ்த்தி வைக்கின்றன!*

*17ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு புரட்சியின் போது பாரிசில் பெண்கள் அடிமைத்தனமாக நடத்தப்படுவதை எதிர்த்துக் கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்துக் கிளர்ச்சியில் ஈடுப்பட்டனர். பெண்களோடு ஆண்களும் இணைந்து கொள்ள அந்த நாட்டு அரசாங்கமே ஆட்டங்கண்டது!*

*இப்போராட்டம் அனைத்தும் ஐரோப்பிய நாடுகளுக்கும் காட்டுத்தீ போல் பரவியது!*

*இத்தாலியிலும் பெண்கள் தங்கள் வாக்குரிமைக்காக ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்!*

*அந்நாட்டு அரசு வேறு வழியில்லாமல் 1848 மார்ச் 8 அன்று வாக்குரிமையைக் கொடுத்தது!*

*இது அனைத்துலகப் பெண்கள் தினம் மலர வித்தாக அமைந்தது!*

*நியூயார்க் நகரில் நெசவுத் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் 16 மணி நேர வேலை செய்து மிகக் கொடூரமாகச் சுரண்டப்பட்டனர்!*

*அதை எதிர்த்து 1857–ல் உழைக்கும் வர்க்கப் பெண்கள் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டனர்!*

*இதன் இறுதியாக 1908-ல் வாக்குரிமைக்காகக் கொதித்தெழுந்து போராடியதில் அமெரிக்காவே அதிர்ந்து போனது!*

*இவற்றின் விளைவு அனைத்துலகப் பெண்கள் மாநாடு 1910-ல் ஜெர்மன் கம்யூனிஸ்ட் தலைவர் கிளாரா ஜெட்கின் தலைமையில் கூடி உலக மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு...*

*மார்ச் 8-ம் நாளை சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடத் தீர்மானித்தனர்!*

*1917-ல் ரஷ்யாவில் சோசலிசப் புரட்சி நடந்த பின்பு 1920-ல் இருந்து தான் மார்ச் -8 மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.*

*இவ்வாறு தான் 8 மணி நேர வேலை, பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு, வாக்குரிமை என அனைத்து உரிமையும் போராடித்தான் கிடைத்ததேயொழியே...*

*அரசு பாவ  புண்ணியம் பார்த்துக் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!*