திருப்பூர்:அடிச்சு தாக்குகிறார்... அமைச்சர் செங்கோட்டையன் என்று அனைவரும் தெரிவிக்கின்றனர். எதற்காக தெரியுங்களா?


திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஈரோடு லோக்சபா தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அதிமுக மூத்த நிர்வாகியான அமைச்சர் செங்கோட்டையன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.


பின்னர் நிருபர்களிடம் செங்கோட்டையன் கூறியதாவது: இந்த ஆண்டு பள்ளிக் கல்வித்துறைக்கு மட்டும் ரூ.28 ஆயிரம் கோடியினை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. 6, 7, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ், 3000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்டுவர உள்ளோம். உயர்கல்வி பயிலும் மாணவ மாணிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.


மலை வாழ் பள்ளி மாணவ, மாணவிகள் தடையில்லாமல் கல்வி கற்க, ரோபோ ஆசிரியர்களை கொண்டு பாடம் நடத்தும் திட்டம் உள்ளது. நீங்கள் என்ன கேட்டாலும் ரோபோ அதற்கு பதில் அளிக்கும். மாணவர்களுக்கு மைக்ரோ சிப் பொருத்திய அடையாள அட்டை வழங்கப்படும். இதன் மூலம் ரோபோவுடன் அலைக்கதிர் இணைக்கப்படும் என்றார். நடக்க கூடியதா? இப்படி அடிச்சு விடறாரோ... என்கின்றனர் மக்கள்.