பிளஸ் 1, பிளஸ் 2 சிறப்பு தேர்வு 3ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

Image result for EXAM APPLICATION TNDGE

சென்னை : 'பிளஸ் 1 பழைய பாட திட்டம் மற்றும், பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, ஜூன் சிறப்பு தேர்வே இறுதி வாய்ப்பு' என, அரசு தேர்வு துறை அறிவித்து உள்ளது. இது குறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு : பிளஸ் 1 பழைய பாட திட்டத்தில் தேர்வு எழுதி, சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்கள் , அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற, ஜூனில் நடத்தப்படும், சிறப்பு துணை தேர்வே இறுதி வாய்ப்பு.பிளஸ் 2 தேர்விலும், பழைய பாட திட்டம் மற்றும் பழைய, 1,200 மதிப்பெண் தேர்வு முறையில் தேர்ச்சி பெறுவதற்கு, ஜூன் சிறப்பு தேர்வே இறுதி வாய்ப்பாகும்; வேறு தேர்வுகள் நடத்தப்படாது. 

புதிய பாட திட்டத்தில், இந்த ஆண்டு, பிளஸ் 1 தேர்வு எழுதியவர்கள், தேர்வு முடிவுகள் வந்த பின், தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு விண்ணப்பிக்க, அவகாசம் வழங்கப்படும்.பிளஸ் 2 சிறப்பு தேர்வு, ஜூன், 6 முதல், 13 வரையிலும், பிளஸ் 1 சிறப்பு தேர்வு, ஜூன், 14 முதல், 21 வரையிலும் நடத்தப்படும். தேர்வு தேதிகளை, www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இந்தத் தேர்வில் பங்கேற்க விரும்புவோர், வரும், 3 முதல், 8ம் தேதி மாலை, 5:45 மணிக்குள், தாங்கள் படித்த பள்ளிகள் வழியாக, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்க வேண்டும். 

மொத்தம், 600 மதிப்பெண்களுக்கான தேர்வில், பிளஸ் 1, பிளஸ் 2வில், எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று, செய்முறையில் தேர்ச்சி பெறாமல் இருந்தால், அவர்கள், செய்முறை தேர்வில் மட்டும், மீண்டும் பங்கேற்றால் போதும்.செய்முறை தேர்வில் பங்கேற்காமல், எழுத்து தேர்வு எழுதி, அதில் தேர்ச்சிக்கு குறைவான மதிப்பெண் பெற்றவர்கள், எழுத்து தேர்வு மற்றும் செய்முறை தேர்வு, இரண்டிலும் மீண்டும் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment