10ம் வகுப்பு தனி தேர்வு விண்ணப்பிக்க அறிவிப்பு

சென்னை:பத்தாம் வகுப்பில், ஜூன் மாத தேர்வுக்கு வரும், 8ம் தேதி முதல், 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:பத்தாம் வகுப்பில், இந்த ஆண்டு மார்ச் பொது தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனி தேர்வர்களுக்கு, ஜூனில் நடக்கும் சிறப்பு துணை தேர்வே இறுதி வாய்ப்பாகும்.எனவே, ஜூன் தேர்வில் பங்கேற்க விரும்பும் தனி தேர்வர்கள், வரும், 8ம் தேதி முதல், ஏப்.,12 வரை, தேர்வு துறை சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விபரங்களை, www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment