'கஜா'வால் பாதிக்கப்பட்ட 15 பள்ளிகள் 'சென்டம்'

தஞ்சாவூர், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற, பிளஸ் 2 பொதுத் தேர்வில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள, 217 பள்ளிகளைச் சேர்ந்த, 12,661 மாணவர்களும், 16,203 மாணவியரும் என, மொத்தம், 28,864 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில், 11,083 மாணவர்களும், 15,199 மாணவியரும் என, 26,282 மாணவ - மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கஜா புயல்இதில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட, ஒரத்தநாடு கல்வி வட்டாரத்தில் உள்ள, 30 அரசு பள்ளிகளில், 9 பள்ளிகளும், பட்டுக்கோட்டை கல்வி வட்டாரத்தில், 26 பள்ளிகளில், 4 பள்ளிகளும், பேராவூரணியில், 7 பள்ளிகளில், 2 பள்ளிகளும் என, 15 பள்ளி, 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

No comments:

Post a Comment