பிளஸ் 2 தேர்வுக்கு 'தத்கல்' பதிவு

சென்னை : 'பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வுக்கு, தனி தேர்வர்கள், தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வை எழுத விரும்பும் தனி தேர்வர்கள், மார்ச் தேர்வுக்கு விண்ணப்பிக்காவிட்டால், அவர்கள், ஜூன், துணை தேர்வில் பங்கேற்கலாம் என, சலுகை வழங்கப்பட்டது. இந்த தனி தேர்வர்கள், ஏப்., 8 முதல், 12க்குள் விண்ணப்பிக்க அவகாசம் தரப்பட்டது.
அதிலும் விண்ணப்பிக்காதவர்கள், தத்கல் சிறப்பு சலுகை திட்டத்தில், கூடுதல் கட்டணத்துடன், வரும், 15 மற்றும் 16ம் தேதி, அரசு தேர்வு துறையின் சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம். விபரங்களை, www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment