*பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு*

*தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு கள் நாளை வெளியிடப்படுகிறது. மாணவர்களுக்கு குறுந்தகவல் கள் மூலம் தேர்வு முடிவுகள் அனுப் பப்பட உள்ளன. பள்ளிக் கல்வியின் சமச்சீர் பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி 19-ம் தேதியுடன் முடிந்தன. இந்த ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 87 ஆயி ரத்து 992 மாணவர்கள் தேர்வு எழுதி யுள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 29-ல் தொடங்கி ஏப்ரல் 10-ம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில் ஏற்கெனவே அறி வித்தபடி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை (ஏப்ரல் 19) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. மாணவர்கள்

www.tnresults.nic.in,

www.dge1.tn.nic.in

மற்றும்

www.dge2.tn.nic.in


இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். இதுதவிர பள்ளிகளுக்கு மின் னஞ்சல் மூலமும், பள்ளி மாண வர்கள் மற்றும் தனித்தேர்வர் களுக்கு குறுந்தகவல் மூலமும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். இதையடுத்து, பிளஸ் 2 தேர்வர்கள் ஏப்ரல் 20 முதல் 26-ம் தேதி வரை தாங்கள் படித்த பள்ளிகளில் மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம். தொடர்ந்து தற்கா லிக மதிப்பெண் சான்றிதழை ஏப்ரல் 24-ம் தேதி முதல் www.dge.tn.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுதவிர மறுகூட்டல் மற் றும் விடைத்தாள் நகல் பெற மாணவர்கள் படித்த பள்ளிகள் மூலமும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்கள் வழியாகவும் ஏப்ரல் 22 முதல் 24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையே, கடந்த ஆண்டு வரை பிளஸ் 2 தேர்வில் ஒவ் வொரு பாடமும் 200 மதிப்பெண்ணுக்கு நடத்தப்பட் டது. இந்த ஆண்டு முதல் முறையாக 100 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடைபெற்றது. மேலும், தமிழ் உட்பட மொழித்தாள் தேர்வு கள் முன்போல் 2 தாள்களாக இல் லாமல் ஒரே தாளாக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது*

No comments:

Post a Comment