சுருக்கெழுத்து தட்டச்சு தேர்வு முடிவுக்கு 2 மாதம் காத்திருப்பு

சென்னை : 'சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு தேர்வுகள் நடந்து, இரண்டு மாதங்களாகியும், முடிவுகள் வெளியிடப்படாமல் உள்ளன. முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும்' என, தேர்வு எழுதியவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகம் முழுவதும், பிப்., 9, 10ம் தேதிகளில், சுருக்கெழுத்து தேர்வுகளும், 23, 24ம் தேதிகளில், தட்டச்சு தேர்வுகளும் நடந்தன. இத்தேர்வுகளை, 1.50 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிந்து, இரு மாதங்களாகிவிட்டன. விடைத்தாள் திருத்தும் பணி முடிந்து, ஒரு மாதமாகிவிட்டது.
ஆனால், முடிவுகளை வெளியிடாமல், தொழில்நுட்ப கல்வித்துறை மெத்தனம் காட்டி வருகிறது. மார்ச்சில், 10 லட்சம் மாணவர்கள் எழுதிய, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப் பட்டு விட்டன. ஆனால், தட்டச்சு தேர்வு முடிவுகள், இன்னும் வெளியிடப்படாமல் உள்ளன.அடுத்த தேர்வு, ஆகஸ்டில் நடக்க உள்ளது; அதற்கு, மாணவர்கள் தயாராக வேண்டும். எனவே, 'தொழில்நுட்பக் கல்வி வாரியம், உடனடியாக சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்' என, தேர்வு எழுதியவர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment