தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 3% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு எப்போது?

அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு எப்போது என்ற எதிர்பார்ப்பில், தமிழக அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர்


விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டு அகவிலைப்படியினை உயர்த்தி அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வழங்குவது வழக்கமான ஒன்றாகும். அகவிலைப்படி உயர்வு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதம் என இரண்டு முறை வழங்கப்படும்

மத்திய அரசு எப்போதெல்லாம் தன் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்குகிறதோ, அப்போதெல்லாம் தமிழக அரசும், இரண்டொரு நாட்களில் அகவிலைப்படியை உயர்த்தி வழங்குவது வழக்கம். ஜனவரி மாததிற்கான அகவிலைப்படியை மூன்று சதவீதம் உயர்த்தி, மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியிட்டது


ஆனால் ஒரு மாதம் ஆகியும், தமிழக அரசு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கப்படவில்லை

ஜாக்டோ -ஜியோ போராட்டத்தின் போது, தமிழக முதல்வர் பழனிசாமி, மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கும்போதெல்லாம், தமிழக அரசும் உயர்த்தி வழங்குவதாக பெருமையுடன் கூறினார்

ஆனால் ஒரு மாதத்திற்கு மேலாகியும், இதுவரை அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு வெளியிடவில்லை. இதனால் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மட்டுமல்லாது, ஓய்வூதியதாரர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment