ஆண்டுக்கு 372 நாட்கள் கல்வி துறை, 'காமெடி'

மன்சா : பஞ்சாப் மாநில கல்வித் துறை வெளியிட்ட காலண்டரில், ஆண்டுக்கு, 365 நாட்கள் என்பதற்கு பதில், 372 நாட்கள் என, அச்சிடப்பட்டிருந்தது. பஞ்சாபில், முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், மாநில கல்வித் துறை வெளியிட்ட, இந்த ஆண்டுக்கான காலண்டரில், ஆண்டுக்கு, 365 நாட்களுக்கு பதில், 372 நாட்களாக அச்சிடப்பட்டிருந்தது.மாநிலத்தில் உள்ள, பல்வேறு தனியார் மற்றும் அரசு பள்ளிகளில், இந்த காலண்டர்கள் மாட்டப்பட்டுள்ளன.
இதுகுறித்து தகவல் அறிந்த, மாவட்ட கல்வித் துறை அதிகாரி, ரஜிந்தர் கவுர், ''காலண்டர்களை அச்சிட்ட அச்சகத்தில் இந்தத் தவறு நடந்துள்ளது; இந்த காலண்டர்களை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

No comments:

Post a Comment