விளையாட்டு உதவித் தொகை பெற மே 3-க்குள் விண்ணப்பிக்கலாம்

கால்பந்து, கிரிக்கெட் உள்பட பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்குவோருக்கு இந்திய உணவுக் கழகத்தின் தென் மண்டலப் பிரிவு சார்பில் வஸ்ழங்கப்படும் உதவித்தொகை பெற மே 3 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் விளையாட்டுத் துறையில் திறமை மிக்கவர்களை, குறிப்பாக பிற்படுத்தப்பட்ட கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களை ஊக்குவித்து, அவர்களது விளையாட்டுத் திறமையை மேம்படுத்தும் விதமாக, இந்திய உணவுக் கழகத்தின் தென்மண்டலப் பிரிவு உதவித்தொகை வழங்க உள்ளது

அதன்படி, 2019- 2020 ஆம் ஆண்டுக்கு, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, புதுச்சேரி, லட்சத் தீவுகள் மற்றும் அந்தமான் - நிக்கோபார் தீவுகளைச் சேர்ந்த 15 முதல் 18 வயது வரை உள்ளவர்களும், 18 முதல் 24 வயது வரை உள்ள கிராமப்புற, நகர்ப்புற மாணவர், மாணவர் அல்லாதோரும் விண்ணப்பிக்கலாம்

கால்பந்து (ஆண்கள்), ஹாக்கி (ஆண்கள்), கிரிக்கெட் (ஆண்கள்), டேபிள் டென்னிஸ் (ஆண்கள் மற்றும் பெண்கள்), பேட்மிண்டன் (ஆண்கள் மற்றும் பெண்கள்), பளு தூக்குதல் (ஆண்கள் மற்றும் பெண்கள்), தடகளம் (ஆண்கள் மற்றும் பெண்கள்) ஆகிய விளையாட்டுப் பிரிவுகளில் திறமை மிக்கவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கடைசி நாள் மே 3 ஆகும்

மேலும், விவரங்களுக்கு www.fci.gov.in என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம் என மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment