மே, 5ம் தேதி 'நீட்' தேர்வுசென்னை : 'நீட்' நுழைவு தேர்வுக்கு, இன்னும் ஒரு வாரம் மட்டுமே அவகாசம் உள்ளது.பிளஸ் 2 முடித்த மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர்வதற்கு, நீட் நுழைவு தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே, எம்.பி.பி.எஸ்., மற்றும், பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளில் சேர முடியும்.இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான, நீட் நுழைவு தேர்வு, வரும், 5ம் தேதி நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு, இன்னும் ஒரு வாரம் மட்டுமே அவகாசம் உள்ளதால், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், இறுதி கட்ட, நீட் பயிற்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment