600 இடங்களில் 'வெப் கேமரா'

சென்னை : ''இடைத்தேர்தல் நடக்க உள்ள, நான்கு சட்டசபை தொகுதிகளில், 600 ஓட்டுச்சாவடிகளில், 'வெப் கேமரா' பொருத்தப்படும்,'' என, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:இடைத்தேர்தல் நடக்க உள்ள, நான்கு சட்டசபை தொகுதிகளில், 1,125 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில், 600 ஓட்டுச்சாவடிகளில், ஓட்டுப்பதிவை இணையதளம் வழியாக கண்காணிக்க, 'வெப் கேமரா' பொருத்தப்படும். அதேபோல, தலா, மாதிரி ஓட்டுச்சாவடி ஒன்றும் அமைக்கப்படும்.தமிழக அரசு கொறடா ராஜேந்திரன், சபாநாயகரை சந்தித்து, மூன்று, எம்.எல்.ஏ.,க்களை பதவி நீக்கம் செய்யக் கோரி மனு அளித்தது தொடர்பாக, இதுவரை, யாரும் புகார் அளிக்கவில்லை.

புகார் எதுவும் வந்தால், அது, தேர்தல் விதிமீறலில் வருகிறதா என்று, ஆய்வு செய்யப்படும். நாளை, அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, ஆய்வு நடத்தப்படும். ஓட்டு எண்ணும் மையங்களின் பாதுகாப்பு குறித்த விபரங்கள் கேட்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment