பி.எப்., நிதிக்கு 8 சதவீத வட்டி

சென்னை, 'பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 8 சதவீதமாக தொடரும்' என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் பொது வருங்கால வைப்பு நிதிக்கு ஏப்.1 முதல் ஜூன் 30 வரையிலான காலத்திற்கு 8 சதவீத வட்டி நிர்ணயம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதை பின்பற்றி தமிழகத்திலும் பொது வருங்கால வைப்பு நிதிக்கு 8 சதவீதம் வட்டி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே ஜன.1 முதல் மார்ச் 31 வரையிலான காலத்திற்கு 8 சதவீதம் வட்டி வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment