91.3 சதவீதம் பேர் தேர்ச்சி: மாணவர்கள் முன்னேற்றம்

சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளன. பள்ளி மாணவ - மாணவியரில் 91.30 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவியர் 5 சதவீதம் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழக பாட திட்டத்தில் பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 1ல் துவங்கி மார்ச் 19ல் முடிந்தது. விடைத்தாள் திருத்தம் விரைவுபடுத்தப்பட்டு ஏப்.10ல் திருத்த பணிகள் அனைத்தும் முடிந்தன. ஒரு ஆண்டுக்கு முன் தேர்வுத் துறை அறிவித்த அதே தேதியில் தேர்வு முடிவை வெளியிட்டு சாதனை படைத்துள்ளது.
தேர்வு முடிவு விபரம்:
* மொத்தம் 8.42 லட்சம் மாணவ - மாணவியரும்; 26 ஆயிரத்து 911 தனி தேர்வர்களும் தேர்வு எழுதினர். இதில் 7.69 லட்சம் மாணவ - மாணவியர் தேர்ச்சி பெற்றனர். இது 91.30 சதவீதம். 2018ல் 91.10 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக 0.20 சதவீதம் பேர் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்
* மாணவர்கள் நான்கு லட்சம் பேர் தேர்வு எழுதினர்; ௩.௮௯ லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 88.57 சதவீதம்
* மாணவியர் ௪.௬௦ லட்சம் பேர் தேர்வு எழுதி ௪.௫௨ லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 93.64 சதவீதம். மூன்றாம் பாலினத்தவர் யாரும் இந்த முறை பள்ளி வழியாக தேர்வு எழுதவில்லை. மாணவர்களை விட மாணவியர் 5.07 சதவீதம் பேர் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்
* கணிதம் அறிவியல் வணிகவியல் பொருளியல் வரலாறு போன்ற பாடங்கள் உள்ள பொது பிரிவில் 7.88 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்
* தொழிற்கல்வி என்ற வொகேஷனல் பிரிவில் 55 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்; 21 ஆயிரத்து 760 பேர் மாணவியர்
n மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் நிர்வாகத்தில் உள்ள 7083 பள்ளிகளின் மாணவ - மாணவியர் தேர்வு எழுதியுள்ளனர். இவற்றில் 1281 பள்ளிகளின் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்
* ஒவ்வொரு பிரிவிலும் இயங்கும் பள்ளிகளில் ஓரியன்டல் பள்ளிகள் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் மாநிலத்தில் அதிகமாக 98.59 மற்றும் 98.31 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன
* மாவட்ட வாரியான தேர்ச்சி பட்டியலில் திருப்பூர் மாவட்டம் 95.37 சதவீதத்துடன் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஈரோடு மற்றும் பெரம்பலுார் மாவட்டங்கள் தேர்ச்சி பெற்றுள்ளன
* அரசு பள்ளி மாணவர்களில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 92.64 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறைந்த பட்சமாக திருவள்ளூர் மாவட்டம் 76.14 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. தலைநகர் சென்னையில் 87.54 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்
* பாடப்பிரிவுகளில் அறிவியல் 92.75; வணிகவியல் 90.78; கலை பிரிவு 80.13 மற்றும் தொழிற்கல்வியில் 82.70 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்
* அரசு பள்ளிகள் 84.76; அரசு உதவி பெறும் பள்ளிகள் 93.64; மெட்ரிக் பள்ளிகள் 98.26; இரு பாலர் பள்ளிகள் 91.67 ஆண்கள் பள்ளிகள் 83.47 மற்றும் மகளிர் பள்ளிகள் 93.75 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவியர் 'வீக்'
* கடந்த ஆண்டில் மாணவர்கள் 87.7 சதவீதம் மாணவியர் 94.1 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். அதாவது மாணவர்களை விட மாணவியர் 6.4 சதவீதம் அதிக தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு மாணவியரின் தேர்ச்சி விகிதம் 0.46 சதவீதம் குறைந்துள்ளது. மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 0.87 சதவீதம் கடந்த ஆண்டை விட உயர்ந்துள்ளது.
இன்று 'மார்க் ஷீட்'
பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் இன்று முதல் தற்காலிக மதிப்பெண் பட்டியலை பெறலாம். பள்ளி மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் பட்டியலை இன்று காலை 9:00 மணி முதல் 26ம் தேதி வரை தங்கள் பள்ளிகளில் பெற்று கொள்ளலாம். தனி தேர்வர்களும் பள்ளி மாணவர்களும் வரும் 24ம் தேதி காலை 9:00 மணி முதல் 26ம் தேதி வரைwww.dge.tn.nic.inஎன்ற இணையதளத்தில் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம். 'மறுகூட்டல் மறுமதிப்பீடுக்காக விடைத்தாள் நகல் பெற நாளை மறுநாள் முதல் விண்ணப்பிக்கலாம்' என அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment