*வாக்குச்சாவடியினுள் நுழைய அதிகாரம் பெற்றவர்கள்*

*வாக்குச்சாவடியினுள் நுழைய அதிகாரம் பெற்றவர்கள்*

தேர்தல் துவங்கியாச்சு...

அதுசரி வாங்க வாக்குச்சாவடிக்குள்ளே போவோமா?

அட நில்லுங்க.
எல்லோரும் வாக்குச்சாவடிக்குள்ளே நுழைய முடியாது.

யாரெல்லாம் நுழையலாம் இது தான் இந்தபகுதி.


வாக்குப்பதிவு அலுவலர்கள்...

வேட்பாளர், மற்றும் அவரது தேர்தல் முகவர்.

தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்.

தேர்தல் பணிக்காக நியமனம் செய்யப்பட்ட பொது ஊழியர்கள்.
(எகா) தேர்தல் பார்வையாளர்கள்.

Micro observers, Photographer/ photographers/ web casting staff/

வாக்காளர் கையில் கொண்டுவரும் குழந்தை

பார்வையற்ற/ நலிந்தவாக்காளருடன் வரும் உதவியாளர்.

அடையாளம் காட்டும் அலுவலர்...

வேட்பாளர்கள் அவருக்கென தேர்தல் நடத்தும் அலுவலர் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அணிந்து வர வேண்டும்.

வேட்பாளர் வழங்கிய தேர்தல் முகவர்கள் நியமன கடிதத்தில் புகைப்படம் ஒட்டி அதனை தேர்தல் நடத்தும் அலுவலர் சான்றொப்பம் செய்திருக்க வேண்டும்.

வாக்குச்சாவடி காவல் அதிகாரி தேவை என வாக்குச்சாவடி தலைமை அலுவலர் அழைத்தால் அன்றி வாக்குச்சாவடிக்குள் நுழையக் கூடாது.

வேட்பாளர் அல்லது தேர்தல் முகவருடன் பாதுகாப்பிற்காக வரும் வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்க கூடாது.

Z+ பாதுகாப்பில் உள்ளவருடன் வரும் பாதுகாப்பு அலுவலர் சாதாரன உடையுடன் ஆயுதங்களை மறைத்து வரலாம்.

மத்திய மாநில அமைச்சர்கள் public servants in duty என்கிற அளவீட்டில்வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்க கூடாது.

பாதுகாப்பு படையினருடன் வரும் மந்திரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் அல்லது தேர்தல் முகவர்களின் பாதுகாப்பு அலுவலர்கள் வாக்குச்சாவடிக்குள் நுழைய அனுமதி இல்லை.

அவர்கள் வாக்குச்சாவடியில் வாயிலில் நிறுத்தப்பட வேண்டும்.

அடையாளம் காட்டும் அலுவலரும் வாக்குச்சாவடிக்குள் அமர வைக்கப்படக்கூடாது.

தேவை ஏற்படும் சமயத்தில் உள்ள வர ஏதுவாக வெளியில் அமரவைக்கப்பட வேண்டும்...

இப்படி கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் வாக்குப்பதிவு அமைதியாக போகும்...

அமைதியா நடத்த தயாராவோம்...

*_தேர்தல் பணிகளை விரும்பிச் செய்வோம்.._*

*_தேர்தல் விதிகளை விளங்கச் சொல்வோம்.._*

No comments:

Post a Comment