சிறப்பு துணை தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

'பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள், விண்ணப்பிக்கலாம்' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.


இது குறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர்,வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிளஸ் 2வுக்கு, வரும் கல்வி ஆண்டில், புதிய பாடத் திட்டம் அமலாகிறது.பழைய பாடத் திட்டத்தில், பிளஸ் 2 படித்தவர்கள், ஏதாவது பாடங்களில் தேர்ச்சி பெறாமல் இருந்தால், ஜூனில் நடக்க உள்ள சிறப்பு துணைத் தேர்வில் பங்கேற்று, தேர்ச்சி பெற வேண்டும்.

தவறினால், பிளஸ் 1 தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்ற பிறகே, பிளஸ் 2 தேர்வை எழுத முடியும். எனவே, 2018 மார்ச்சில் தேர்வு எழுதி, தேர்ச்சி பெற முடியாதவர்கள், ஜூன் சிறப்பு துணைத் தேர்வில் பங்கேற்கலாம். அதற்கு, 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.அரசு தேர்வுத் துறை சேவை மைய விபரங்களை பள்ளிகளிலும், கல்வி அலுவலகங்களிலும், www.dge.tn.gov.in என்ற, இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment