'டிப்ளமா' ஆசிரியர் தேர்வு

சென்னை : தொடக்க கல்வி, 'டிப்ளமா' ஆசிரியர் தேர்வுக்கு, நாளை முதல் தத்கலில் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, தேர்வு துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:தொடக்க கல்வியில் ஆசிரியர் பணியில் சேர்வதற்கான, டிப்ளமா தேர்வு, ஜூன், 14 முதல், 29 வரை நடக்க உள்ளது. தனி தேர்வர்களாக பங்கேற்க விரும்புவோரிடம், ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பிக்க தவறியவர்கள், சிறப்பு கட்டணம் செலுத்தி, தத்கல் முறையில், நாளை மற்றும் நாளை மறுநாள் விண்ணப்பிக்கலாம். 

இதற்கான விண்ணப்பங்களை, www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். தேர்வர்கள் தாங்கள் வசிக்கும் மாவட்டத்தில் உள்ள, ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment