ஆசிரியர் தகுதித்தேர்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை கடைசி நாள் ஆகும். 

நிகழாண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் 1 முதல் 5- ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிகளுக்கு இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களும், 6 முதல் 8 -ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களும் நியமனம் செய்யப்படுகிறார்கள். 
இத்தேர்வுக்கு www.trb.tn.nic.in இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கடந்த மார்ச் 15-ஆம் தேதி ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியது. 
இதையடுத்து ஏப்ரல் 5-ஆம் தேதியுடன் விண்ணப்பிக்கும் அவகாசம் முடிந்த நிலையில், இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விண்ணப்பிப்பதில் இடையூறு ஏற்பட்டது என பலர் புகார் கூறியதைத் தொடர்ந்து, ஏப்ரல் 12 வரை அவகாசத்தை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இதற்கான எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகவுள்ளது.

No comments:

Post a Comment