முதுநிலை மருத்துவ படிப்பு: , நாளை இரண்டாம் கட்ட கவுன்சிலிங்

சென்னை, அரசு ஒதுக்கீட்டில் உள்ள, 345 முதுநிலை மருத்துவ படிப்பு இடங்களுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், நாளை துவங்க உள்ளது.அரசு மருத்துவ கல்லுாரிகளில், 1,761 எம்.டி., - எம்.எஸ்., - எம்.டி.எஸ்., போன்ற, முதுநிலை மருத்துவ படிப்புகள் உள்ளன. இதில், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு, 849 இடங்கள் சென்றன.

மாநில ஒதுக்கீட்டில், 912 இடங்கள் உள்ளன.இத்துடன், தனியார் மருத்துவ கல்லுாரிகளில் இருந்து, மாநில ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்ட, 181 இடங்கள் என, மொத்தம், 1,093 இடங்களுக்கான, முதற்கட்ட மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஏப்., 1ல் நடந்தது.கவுன்சிலிங்கில் இடங்கள் பெற்றும் கல்லுாரியில் சேராதோர், இடையில் நின்றோர் என, 179 இடங்கள் காலியாக உள்ளன.அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாத, 166 இடங்கள் மாநில ஒதுக்கீட்டுக்கு திரும்பின. எனவே, 345 இடங்களுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், நாளை துவங்கி, 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு, www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment