சூரியனில் தென்படும்  கரும்புள்ளியால் ஆபத்தா? வானியல் மையம் விளக்கம்
கொடைக்கானல்:'பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனில் கரும்புள்ளிகள் உருவாகும். அது தற்போது துவங்கியுள்ளது' என, கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வான் இயற்பியல் மையம் உள்ளது. இங்கு சூரியனில் ஏற்படும் காந்த புயல்கள், கரும்புள்ளிகள், சூரியன் வெளியிடும் கதிர்வீச்சுகள் உள்ளிட்டவற்றை கண்காணித்து விஞ்ஞானிகள் ஆய்வு நடத்துகின்றனர்.
இதுகுறித்து விஞ்ஞானி எபினேசர் கூறியது: 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனில் கரும்புள்ளிகள் தோன்றும். 2007க்குப் பின் தற்போது கரும்புள்ளிகள் உருவாகத் துவங்கியுள்ளது. இக்கரும்புள்ளிகளால், சூரியனில் அதிக அளவு காந்த புயல் ஏற்பட்டு, வளிமண்டலம் வழியாக பூமியின் வட மற்றும் தென் துருவத்தை வந்தடையும். காந்த புயலால் வெப்பநிலையில் எந்த பாதிப்பும் இருக்காது, என்றார்.