வாக்குப்பதிவு எந்திரங்கள் முத்திரையிடல்

*வாக்குப்பதிவு எந்திரங்கள் முத்திரையிடல்*


மாதிரி வாக்குப்பதிவு முடிந்த பின் வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் VVPAT ஆகியவற்றை சீல் வைக்கும் பணி.

பொறுமையுடனும் பொறுப்பாகவும் செயல்பட வேண்டிய காலம் இது.

Mock poll முடிந்த பின்னர் VVPAT ல் அச்சாகி விழுந்திருக்கும் சீட்டுகளை எடுத்து அதன் பின்புறம் rubber stamp உதவியுடன் *MOCK POLL SLIP* என முத்திரையிட்டு அதற்கென வழங்கப்பட்ட கருப்பு நிற கவரில் வைத்து அரக்கு முத்திரையிடப்பட வேண்டும்.

அந்த கவரின் மேல் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் ஒப்பமிட்டு *VVPAT  Paper slips of MOCK POLL* என எழுதி வைக்க வேண்டும்.

VVPAT ல் இருந்த paper slipகள் எடுக்கப்பட்ட பின்னர் காலியாக இருக்கும் VVPAT முகவர்களுக்கு காண்பிக்கப்பட்டு அந்த பகுதி அரக்கு முத்திரை இடப்பட வேண்டும்.

அடுத்தபடியாக முத்திரையிட வேண்டியது Control unit.
Control unit என்பது Green paper seal, special tag, மற்றும் ,Strip seal ஆகியவற்றால் சீலிடப்பட வேண்டும்.

green paper seal, SPL Tag Strip seal ஆகியவை வரிசை எண்கள் வழங்கப்பட்டவை என்பதாலும் அவை குறித்த பதிவுகள் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் அவர்களின் நாட்குறிப்பில் பதிவு செய்யப்படும் என்பதாலும் மிக கவணமாக கையாளப்பட வேண்டும்.

Control unit ஐ சீலிடுவது எப்படி?

*_தேர்தல் பணிகளை விரும்பிச் செய்வோம்.._*

*_தேர்தல் விதிகளை விளங்கச் சொல்வோம்.._*

No comments:

Post a Comment