வி.ஏ.ஓ.,க்கள் கோரிக்கை நிராகரித்தது ஆணையம்

சென்னை : 'ஓட்டு சாவடிகளுக்கு தேவையான வசதிகள்செய்ய வழங்கப்படும், 1,000 ரூபாயை, 4,000 ரூபாயாக உயர்த்த வேண்டும்' என, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் விடுத்த கோரிக்கையை, தேர்தல் ஆணையம் நிராகரித்தது.ஓட்டுச்சாவடியின் முன், ஓட்டுச்சாவடி எண் எழுதுவது; ஓட்டுச்சாவடியை சுற்றி, 200 மீ., சுற்றளவை குறியீடு செய்வது; ஓட்டளிக்க வரும் மக்கள், வெயிலால் பாதிக்காமல் இருக்க, சாமியான பந்தல் அமைப்பது; ஓட்டுச்சாவடியில், மின் வசதி, நாற்காலி, மேஜை போன்ற வசதிகளை ஏற்படுத்துவது போன்ற பணிகளை, வி.ஏ.ஓ.,க்கள் மேற்கொள்வர்.
தற்போது, விலைவாசி உயர்ந்துள்ளதால், ஓட்டுச்சாவடியை தயார் செய்வதற்கு வழங்கப்படும், 1,000 ரூபாயை, 4,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். இந்த தொகையை, முன் பணமாக வழங்க வேண்டும் என, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம், தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்தது.இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த, தேர்தல் ஆணையம், 1,000 ரூபாயை, 4,000 ரூபாயாக உயர்த்தி வழங்க மறுத்து விட்டது. 
ஆனால், முன் பணமாக, 500 ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளது. பணி முடித்த பின், மீதி பணம் வழங்கப்படும்.தமிழகத்தில், 67 ஆயிரத்து, 720 ஓட்டுச்சாவடிகள் அமைய உள்ளன. எனவே, ஓட்டுச்சாவடிக்கு ஆயிரம் ரூபாய் வீதம், 6.77 கோடி ரூபாயை, தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது.

No comments:

Post a Comment