கட்டாயக்கல்வி திட்டத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

கட்டாயக்கல்வி திட்டத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்


சென்னை: குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில், சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் குழந்தைகளுக்கு எல்.கே.ஜி.,யில், 25 சதவீத ஒதுக்கீட்டில் சேர்க்கை நடைபெறுகிறது. அதன்படி, 2019-20ம் கல்வி ஆண்டில் ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று 22ம் தேதி முதல் வரும் மே., 18ம் தேதி வரை நடைபெறுகிறது.


பள்ளிக்கல்வி துறையின் http://rte.tnschools.gov.in/tamilnadu என்ற இணையதளத்தில் மாணவர்களின் போட்டோ, பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் முகவரி சான்று, ஆண்டு வருமான சான்று ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். பெற்றோரின் தொழில், ஆதார் எண், மொபைல் எண் விபரம் இடம்பெற வேண்டும்.

No comments:

Post a Comment