பள்ளிகளை மேம்படுத்த முன்வருவோருக்கு தாமதமின்றி அனுமதி வழங்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை


அரசு பள்ளிகளை மேம்படுத்த முன்வருவோருக்குதாமதம் இன்றி அனுமதி வழங்கிட வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.


அரசு பள்ளிகளை மேம்படுத்தவும், தனியார் பள்ளிகளை விட சிறப்பாக செயல்படவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி, பாடத்திட்டம் புதுப்பித்தல், ஸ்மார்ட் வகுப்பு, கோடை விடுமுறையில் பள்ளியில் சேர அனுமதி வழங்குதல் என பல திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

இதே போல் பள்ளியின் உள்கட்டமைப்பு அடிப்படை வசதிகளை மேம்படுத்த முன்னாள் மாணவர்கள், சமூக அக்கறை கொண்ட பெருநிறுவனங்கள் ஆகியோருக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறைஅழைப்பு விடுத்திருந்தது. இதன் அடிப்படையில் கடந்த கல்வி ஆண்டில் (2018 - 2019) அரசு பள்ளிகளை மேம்படுத்த உதவியாக பல்வேறு நிறுவனங்கள் வழங்கிய சமூக பொறுப்புணர்வு நிதி (CSR) மூலம் 519 பள்ளிகளில் ரூ. 58 கோடி மதிப்பீட்டில்உள்கட்டமைப்பு, இணையதள வசதி, கழிப்பறைபோன்ற பல்வேறு உதவிகளை செய்யப்பட்டுள்ளது.

இதே போல் இந்த கல்வி ஆண்டும் அரசு பள்ளிகளை மேம்படுத்த முன்வரும் முன்னாள் மாணவர்கள், தனியார் பெரு நிறுவனங்கள் போன்றவற்றிற்கு எவ்வித தடையும், தாமதமும் இன்றி உடனடியாக பணிகள் மேற்கொள்ளஅனுமதி வழங்கவேண்டும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. இதனை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு 28,757கோடி ரூபாய் பள்ளிகல்வித்துறைக்கு ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment