தெருவிளக்கில் படித்த மாணவிக்கு ஒளி கொடுத்த தஞ்சை கலெக்டர்


தஞ்சாவூர், தெரு விளக்கில் படித்து, பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவிக்கு, தஞ்சை கலெக்டர், தன் சொந்த செலவில், இரு சோலார் விளக்கும், 10 ஆயிரம் ரூபாய் நிதியும் வழங்கியுள்ளார்.தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அடுத்த பூக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த, கூலித்தொழிலாளி கணேசனின், மகள் சஹானா, 17. இவர், பிளஸ் 2வில், 600க்கு, 524 மதிப்பெண் எடுத்து, பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார்.
மின்சாரமே பார்த்திராத கூரை வீடு, கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பு என்ற நிலையிலும், தெருவிளக்கில் படித்த சஹானா, அதிக மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளதால், அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.போதிய பணம் இல்லாததால், மேற்படிப்பு படிக்க முடியாத நிலையில், மாணவி சஹானா இருப்பது குறித்து, கடந்த, 25ல், நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து, பலரும் மாணவிக்கு உதவிகரம் நீட்டியுள்ளனர்.இந்நிலையில், தஞ்சாவூர் கலெக்டர், அண்ணா துரை, சஹானாவின் குடிசை வீட்டுக்கு, தன் சொந்த செலவில், சோலார் விளக்கு இரண்டு, அமைத்து கொடுத்துள்ளார். மேலும், 10 ஆயிரம் ரூபாய் பணமும் கொடுத்து, 'நீட்' தேர்வில் வெற்றி பெற்றால், மேலும் உதவி கள் வழங்கவும் உறுதி அளித்துள்ளார்

No comments:

Post a Comment