ஆங்கிலோ இந்தியன் 'டாப்' ஆதிதிராவிட பள்ளிகள் சரிவு

சென்னை, பிளஸ் 2 தேர்வில் ஒவ்வொரு ஆண்டும், சமூக நலத்துறை பள்ளிகள், குறைந்த பட்ச தேர்ச்சி பெறும். இந்த ஆண்டு, ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகள், குறைந்த பட்ச தேர்ச்சி பெற்றுள்ளன.தமிழக அரசு பள்ளிகள், ஒவ்வொரு துறையின் கீழ், தனித்தனியாக நடத்தப்படுகின்றன. பள்ளி கல்வி துறை மட்டுமின்றி, பிற்பட்டோர் நலத்துறை, சமூக நலத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, வனத்துறை என, பல துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ளன.நிர்வாக ரீதியாக பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில், ஓரியன்டல் பள்ளிகள், 98.59 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், 98.31 சதவீதம், மெட்ரிக் பள்ளிகள், 98.26; சி.பி.எஸ்.இ.,யின் மாநில பாட திட்டம் உள்ள பள்ளிகள், 98.12; பகுதி அரசு உதவி, 94.99; அரசு உதவி பெறும் பள்ளிகள், 93.64 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.பள்ளி கல்வி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகள், 84.76 சதவீதம் மட்டுமே, தேர்ச்சி பெற்றுள்ளன. மிக குறைந்த பட்சமாக, ஆதி திராவிடர் நலத்துறையின் பள்ளிகளில், 78.88 சதவீதம் பேர் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாநகராட்சி, 86.86; வனத்துறை, 88.32; இந்து அறநிலைய துறை, 91.41; கள்ளர் சீர்திருத்தம், 89.56; நகராட்சி, 86.77; ரயில்வே, 91.67; சமூக நலத்துறை, 93.52; பழங்குடியினர் நலன் பள்ளிகள், 87.04 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

No comments:

Post a Comment