அரசு பாலிடெக்னிக்களில் விண்ணப்பம் வினியோகம்

சென்னை : அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் முதலாம் ஆண்டு டிப்ளமா படிப்பில் சேர மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நடப்பு கல்வியாண்டில் அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் முதலாம் ஆண்டு டிப்ளமா படிப்பு சில பாலிடெக்னிக் கல்லுாரிகளில் பகுதி நேர பட்டயப் படிப்பில் சேர நேற்றுமுன்தினம் முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. மே 17 வரை காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வியில் தேர்ச்சி பெற்றவர்கள் சேரலாம். விண்ணப்பம் விலை 150 ரூபாய். எஸ்.சி. - எஸ்.டி. இனத்தவருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மே 17க்குள் ஒப்படைக்க வேண்டும்.

No comments:

Post a Comment