விளையாட்டு விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை

சென்னை : விளையாட்டு விடுதிகளில் சேர்ந்து, பயிற்சி பெற விரும்புவோரிடமிருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், சென்னை, மதுரை, திருச்சி, ஊட்டி, துாத்துக்குடி, விழுப்புரம் உட்பட, 17 இடங்களில், மாணவர்களுக்காகவும், 10 இடங்களில் மாணவியருக்காகவும் விளையாட்டு விடுதிகள் உள்ளன.இவற்றில் தங்கி, விளையாட்டுகளில் பயிற்சி பெற்று, சிறந்த விளையாட்டு வீரர்களாக விரும்பும், 7, 8, 9 மற்றும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கான சேர்க்கை, மே, 8 முதல், 10ம் தேதி வரை நடக்க உள்ளது.

இதற்கான விண்ணப்பத்தை, www.sdat.tn.gov.in என்ற, இணையதளத்தில் பூர்த்தி செய்து, மே, 7 மாலை, 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.விளையாட்டுப் போட்டிகளில், மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, முன்னுரிமை வழங்கப்படும்.

No comments:

Post a Comment