ஆசிரியரின் இருபதாண்டு கால மரம் வளர்ப்புப் பணியினை பாராட்டி விருது


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள மேலகண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் முனைவர் மணி.கணேசன் அவர்களது கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்கள் மூலமாக நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளை வழங்கி நட்டு வளர்த்து வரும் சேவையைப் பாராட்டி அண்மையில் திருச்சி சிறுகனூர் எம்.ஏ.எம்.பொறியியல் கல்லூரியில் இயற்கையின் உறவுகள் மாநாடு மற்றும் விருது விழாவில் சிறந்த இயற்கைக் காவலர் விருதினை முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் அவர்களின் பேரனும் டாக்டர் கலாம் விஷன் 2020 இன் நிறுவனருமான ஷேக் சலீம் என்பவரால்  வழங்கப்பட்டது. விருது பெற்ற ஆசிரியரின் இருபதாண்டு கால மரம் வளர்ப்புப் பணியினைக் கிரீன் நீடா இராஜவேலு, பசுமைக் கரங்கள் கைலாசம், ஜேசீஐ இராஜகோபால், அப்துல்கலாம் மாணவர்கள் விழிப்புணர்வு இயக்க நிர்வாகி ரியாஸ் ஆகியோர் வெகுவாகப் பாராட்டினர்.

No comments:

Post a Comment