SCHOOL MORNING PRAYER ACTIVITIES - 12.04.2019

school morning prayer க்கான பட முடிவு

திருக்குறள்
அதிகாரம்:தீவினையச்சம்

திருக்குறள்:207

எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.

விளக்கம்:

ஒருவர் நேரடியான பகைக்குத் தப்பி வாழ முடியும்; ஆனால், அவர் செய்யும் தீய வினைகள் பெரும் பகையாகி அவரைத் தொடர்ந்து வருத்திக்கொண்டே இருக்கும்.

பழமொழி

காகம் குளித்தாலும் கொக்கு ஆகாது

One should know one's position and not try to copy others

இரண்டொழுக்க பண்புகள்

1.பயணம் செய்யும் போது தேவை படுவோருக்கு எழுந்து இடம் கொடுப்பேன்
2. நீரை மிக சிக்கனமாக உபயோகிப்பது மட்டும் அல்ல அதை சேமிக்கவும் முயல்வேன்

பொன்மொழி

தோல்விகளை எதிர்கொள்ள  கற்றுக் கொள்ளுங்கள். அதுதான் வெற்றிக்கான மிக முக்கியமான திறமை.

          - அப்துல்கலாம்

 பொது அறிவு

1.தமிழக மக்களால் தென்னாட்டு பெர்னாட்ஷா என்று அழைக்கப்பட்டவர் யார்?

 அறிஞர்  அண்ணா

2. சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஆளுநர் யார்?

 சரோஜினி நாயுடு

பகல் நேரத்தில் எப்படிச் சாப்பிட்டாலும் நாம் செய்யும் வேலைகளால் அவை ஜீரணித்துவிடும். இரவு நேரத்தில் மிக எளிதில் ஜீரணிக்கும் உணவைச் சாப்பிட்டால்தான் நமது ஜீரண உறுப்புக்கள் ஆரோக்கியமாகச் செயல்பட்டு அஜீரணக்கோளாறு, அசிடிட்டி, மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து நம்மைக் காக்கும். இரவில் தவிர்க்க வேண்டிய உணவுகள் சில ...

1. இறைச்சி: இறைச்சியில் அதிக அளவிலான புரோட்டினும் கொழுப்புச்சத்தும் உள்ளன. எனவே,  இதைச் செரிக்க அதிக நேரம் எனர்ஜி தேவைப்படும். இரவு நேரத்தில் அத்தகைய ஆற்றல் கிடைக்காது. இறைச்சி உணவுகள் ஜீரணமாக மூன்று முதல் நான்கு மணி நேரம் ஆகும். ஆகையால், செரிமானக் கோளாறு ஏற்பட்டு தூக்கமின்மை ஏற்படும். வாய்வுத்தொல்லை உருவாகும்.

2. கீரை: கீரையை இரவு உணவாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஏனெனில், இரவில் கீரையை எடுத்துக்கொள்வதால் உடலுக்கு, தேவைக்கும் அதிகமான கலோரி கிடைக்கிறது. அதிக கலோரி வயிற்றை அசெளகர்யம் அடையச்செய்கிறது. இதனால், செரிமானக் கோளாறு ஏற்படும்.

3. ஸ்பைசீ உணவுகள்: ஸ்பைசீ உணவுகளில், அதிக அளவு கொழுப்பு மற்றும் அதிக அளவு கலோரி நிறைந்து இருக்கும். செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும்; அதிக உடல் அழுப்பை உண்டாக்கும். நெஞ்சு எரிச்சலை உண்டாக்கும். ஸ்பைசீ உணவில் உள்ள கார்போஹைட்ரேட், உடலின் இன்சுலின் அளவை  அதிகரித்து, ரத்தத்தில் கொழுப்பை அதிகரிக்கச்செய்கிறது. இவற்றில் உள்ள அதிக அளவு கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் சோடியம், உடல் பருமனை அதிகரிக்கும்.

English words and Meaning

Quench.  தணித்தல் குளிரச்செய்தல்
Satisfy. திருப்திகரம்
Rumour.   வதந்தி,
தவறானசெய்தி
Revolve. சுற்றுதல்,
வட்டமிடுதல்
Plot. திட்டமிடுதல்,
துண்டுநிலம்,காவியம்

அறிவியல் விந்தைகள்

பச்சையம்
*பச்சையம் இலைகளுக்குப் பச்சை நிறத்தைக் கொடுக்கும் ,ஒரு பச்சை வர்ண ஒளிச்சேர்க்கை நிறமி ஆகும்.
*இது ஒளித்தொகுப்பில் பயன்படுத்துவதற்கான ஒளியையும் உறிஞ்சுகிறது.
*தாவர உயிரணுக்களில் உள்ள பச்சையமணிகளில் பச்சையம் உயர் செறிவாகக் காணப்படுகின்றது.
*இது இருந்தால் மட்டுமே தாவரம் ஒளிச் சேர்க்கை செய்ய முடியும்.

Some important  abbreviations for students

* NEP   -  National Education Policy

* NHRC    -   National Human Rights Commission

நீதிக்கதை

சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் ஓர் ஊரில் தங்கியிருந்தார். அங்கு ஒரு நீரோடையும் பாலமும் இருந்தன. ஒரு நாள் சுவாமி விவேகானந்தர், நீரோடைக் கரையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அங்கு இளைஞர்கள் சிலர், முட்டையோடுகளைத் துப்பாக்கியால் குறிவைத்து சுடுவதற்குப் பயிற்சி செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள், முட்டையோடுகளை ஒரு நூலில் கட்டி, நீரோடையில் மிதக்க விட்டிருந்தார்கள். அந்த நூல், நீரோடைக் கரையிலிருந்த சிறிய ஒரு கல்லில் கட்டப்பட்டிருந்தது. நீரோடை நீரின் அசைவுக்கு ஏற்ப, நூலில் கட்டப்பட்டிருந்த முட்டையோடுகள் இலேசாக அசைந்துகொண்டிருந்தன. இளைஞர்கள் பாலத்தில் நின்று, ஓடை நீரில் அசைந்துகொண்டிருக்கும் முட்டையோடுகளைச் சுடுவதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள் துப்பாக்கியால் முட்டையோடுகளைச் சுட்டார்கள். ஆனால் அவர்கள் வைத்த குறி தவறித்தவறிப் போயிற்று. ஒரு முட்டையோட்டைக்கூட அவர்களால் சுட முடியவில்லை. இளைஞர்களின் இந்தச் செயலை விவேகானந்தர் பார்த்தார். இவர்களால் இந்த முட்டையோடுகளைச் சுடமுடியவில்லையே! என்று நினைத்தார். அதனால் அவர் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. இதை அங்கிருந்த இளைஞர்களில் ஒருவன் கவனித்தான்.

அவன் விவேகானந்தரிடம், பார்ப்பதற்கு இந்த முட்டையோடுகளைச் சுடுவது சுலபமான செயல் போன்று தெரியும். ஆனால் நீங்கள் நினைப்பதுபோல், இந்த முட்டையோடுகளைச் சுடுவது அவ்வளவு சுலபமான செயல் அல்ல. நீங்களே முயற்சி செய்து பாருங்கள்! அப்போது உங்களுக்கே தெரியும்! என்று கூறினான். சுவாமி விவேகானந்தர் துப்பாக்கியைக் கையில் எடுத்தார். அங்கிருந்த முட்டையோடுகளைக் குறி வைத்து சுட ஆரம்பித்தார். அப்போது அங்கு சுமார் பன்னிரெண்டு முட்டையோடுகள் நீரோடையில் மிதந்துகொண்டிருந்தன. விவேகானந்தர் வைத்த குறி ஒன்றுகூட தவறவில்லை. வரிசையாக அவர் ஒவ்வொரு முட்டையோடாகச் சுட்டார். அங்கிருந்த அத்தனை முட்டையோடுகளும் வெடித்துச் சிதறின! இதைப் பார்த்து அங்கிருந்த இளைஞர்கள் பெரிதும் வியப்படைந்தார்கள். அவர்கள் விவேகானந்தரிடம், நீங்கள் துப்பாக்கிச் சுடுவதில் ஏற்கெனவே நல்ல பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். அதனால்தான் நீங்கள் அத்தனை முட்டையோடுகளையும் ஒரு குறிகூடத் தவறாமல் சுட்டீர்கள், இல்லையா? என்று வினவினார்கள். அதற்கு விவேகானந்தர், என் வாழ்நாளில் இன்றுதான் நான் முதன் முறையாகத் துப்பாக்கியைத் தொடுகிறேன் என்றார். அவர் கூறியதை இளைஞர்களால் நம்ப முடியவில்லை.

அவர்கள், அப்படியானால் ஒரு குறி கூடத் தவறாமல் உங்களால் எப்படி முட்டையோடுகளைச் சுட முடிந்தது? என்று கேட்டார்கள். அதற்கு விவேகானந்தர், எல்லாம் மனதை ஒருமுகப்படுத்துவதில் தான் இருக்கிறது. மனதை ஒருமுகப்படுத்திச் செய்யும் எந்தச் செயலும் வெற்றியைத் தரும் என்று பதிலளித்தார். மேலும் சுவாமி விவேகானந்தர் மனஒருமைப்பாடு பற்றி இவ்விதம் கூறியிருக்கிறார்: வெற்றியின் ரகசியம் மனத்தை ஒருமுகப்படுத்துவதில்தான் இருக்கிறது. உயர்ந்த மனிதனையும் தாழ்ந்த மனிதனையும் ஒப்பிட்டுப் பார். இருவருக்கும் உள்ள வேறுபாடு, தங்கள் மனத்தை ஒருமுகப்படுத்துவதில்தான் இருக்கும். மனத்தை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர, வளர, அதிக அளவில் அறிவைப் பெறலாம். ஏனென்றால் இந்த வழிதான் அறிவைப் பெறுவதற்கு உரிய ஒரே வழி. தாழ்ந்த நிலையில் உள்ள செருப்புக்கு மெருகு போடுபவன், மனத்தை அதில் அதிகம் ஒருமுகப்படுத்திச் செய்தால், மேலும் சிறப்பாகச் செருப்புகளுக்கு மெருகு பூசுவான். மனத்தை ஒருமுகப்படுத்திச் செய்யும் சமையற்காரன் மேலும் சிறந்த முறையில் உணவு சமைப்பான். பணம் சேர்ப்பதோ, கடவுள் வழிபாடோ அல்லது வேறு எந்த ஒரு வேலையானாலும் மனத்தை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர, மேலும் சிறப்பாக அந்தக் காரியத்தைச் செய்து முடிக்கலாம்.

இன்றைய செய்திகள்

12.04.2019

* பலத்த பாதுகாப்புடன் 20 மாநிலங்களில் 91 மக்களவை தொகுதிகளுக்கு 2019 மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு.

* பிலிப்பைன்ஸ் அகழ்வாராய்ச்சியில் 50,000 ஆண்டுகளுக்கு முந்தைய புதிய மனித குலப் படிமங்கள் கண்டுபிடிப்பு.

* அதிக வேட்பாளர்கள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் தெலங்கானாவின் நிசாமாபாத் தொகுதி கின்னஸ் சாதனை முயற்சியில் இடம்பிடித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

* மலேசிய அணியுடன் நடந்த 4வது ஹாக்கி டெஸ்டில் 1-0 என்ற கோல் கணக்கில் போராடி வென்ற இந்திய மகளிர் அணி, 3-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

* சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் சிந்து, சாய்னா நெவால் ஆகியோர் 2-ஆவது  சுற்றுக்கு முன்னேறினர்.

Today's Headlines

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

🌸The first phase of the 2019 Lok Sabha election to 91 Lok Sabha constituencies in 20 states was completed with strong security.

🌸 The  50,000  years old new human fossils was discovered in the Philippines archipelago.

🌸The Telangana Nizamabad constituency took the place  in Guinness Book of Records which was great surprise for the candidates with high voter and voting machines.

🌸The Indian women's team, who won by 1-0 goals  at the 4th Hockey Test against the Malaysian team,also won the series by 3-0

🌸India's Sindhu and Saina Nehwal advanced to the second round of the women's singles competition at the Singapore Open Badminton Championships.

No comments:

Post a Comment