சென்னைபத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் முடிந்த நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், தேர்வுக்கு வர முடியாதவர்கள் மற்றும் தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும், ஜூன் மாதத்தில், சிறப்பு தேர்வு நடத்தப்பட உள்ளது.

இந்த தேர்வில் பங்கேற்க, ஏற்கனவே விண்ணப்பப் பதிவு நடந்தது.அதில், விண்ணப்பிக்க தவறிய வர்கள், தட்கல் சிறப்புக் கட்டணத்தில், வரும், 13, 14ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். இதில், புதிதாக தேர்வு எழுதுபவர்கள், அரசு தேர்வு துறையின் சேவை மையங்கள் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.மற்றவர்கள், தங்களது பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்கள் வழியே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களை, www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.