இன்ஜி., படிப்பு: 1.20 லட்சம் பேர் விண்ணப்பம்

Image result for anna univ
சென்னை:இன்ஜினியரிங் படிப்பில் சேர பிளஸ் 2 முடித்த 1.20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 

விண்ணப்பிக்க இன்னும் நான்கு நாட்களே அவகாசம் உள்ளது.பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள கல்லுாரிகளில் நிர்வாக இட ஒதுக்கீட்டில் சேர கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டாம். நிகர்நிலை பல்கலைகளில் பி.இ. - பி.டெக். படிப்புகளில் சேருவதற்கும் கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டியதில்லை.ஆனால் பி.இ. மற்றும் பி.டெக். படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டில் சேர்வதற்கு தமிழக அரசின் கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும்.வரும் கல்வி ஆண்டில் இன்ஜினியரிங் சேர விரும்பும் மாணவர்களுக்கு கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 2ல் துவங்கியது; மே 31ம் தேதியுடன் முடிகிறது.பதிவு துவங்கி 25 நாட்களான நிலையில் 1.20 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.நான்கு நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளதால் இந்த எண்ணிக்கை 1.30 லட்சம் வரை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment