ரூ.150க்கு தமிழ் சேனல்கள் ஆப்பரேட்டர்கள் கோரிக்கை

Image result for tn cable tv
'அரசு கேபிள், 'டிவி'யில், 150 ரூபாய்க்கு, அனைத்து தமிழ் சேனல்களையும் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அரசு கேபிள், 'டிவி' ஆப்பரேட்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக, அவர்கள் கூறியதாவது:கேபிள், 'டிவி' ஆப்பரேட்டர்களுக்கு, தனியார் கேபிள், 'டிவி' நிறுவனங்கள், பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன.தற்போது, வாடிக்கையாளர்களை, அவர்கள் பக்கம் இழுக்கும் நோக்கில், ஆப்பரேட்டர்களுக்கு, செட்டாப் பாக்ஸ் மற்றும் ஒரு மாத சந்தாவை இலவசமாக தருகின்றன.இது போன்ற சலுகைகளை, தனியார் கேபிள் நிறுவனங்கள் வழங்கினாலும், அரசு கேபிள், 'டிவி' ஆப்பரேட்டர்கள், அவர்கள் பக்கம் செல்லாமல், அரசு வசம் இருக்கின்றனர்.இது தொடர்ந்து நீடிக்க வேண்டுமெனில், அரசு ஆப்பரேட்டர்களுக்கு, கட்டண சலுகை வழங்க வேண்டும்.அனைத்து தமிழ் சேனல்களையும், 150 ரூபாய்க்கு வழங்கி, கட்டண சுமையை குறைக்க வேண்டும். அப்போது தான், அரசு ஆப்பரேட்டர்களும், மக்களும், தனியார் கேபிளுக்கு செல்வதை தவிர்க்க முடியும்.இவ்வாறு, ஆப்பரேட்டர்கள் கூறினர்.

No comments:

Post a Comment