பிளஸ் 1 விடைத்தாள் நகல் இன்று கிடைக்கும்

சென்னை:'பிளஸ் 1 விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தவர்கள், இன்று முதல், நகலை பதிவிறக்கம் செய்யலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 1 பொது தேர்வு எழுதியோர், விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்திருந்தால், அவர்கள்,scan.tndge.inஎன்ற இணையதளத்தில், இன்று காலை, 10:00 மணி முதல், அதை பதிவிறக்கம் செய்யலாம். நகலை பார்த்து, மறுகூட்டலா, மறுமதிப்பீடா என முடிவு செய்து, விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பங்களை, அதே இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து, அவற்றை பூர்த்தி செய்து, இரண்டு நகல்கள் எடுக்க வேண்டும். அதை, இன்று பகல், 2:00 முதல், 23ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.இதற்கான கட்டணத்தை, முதன்மை கல்வி அலுவலகத்தில், ரொக்கமாக செலுத்தலாம்.மறுகூட்டலுக்கு, உயிரியலுக்கு, 305 ரூபாய்; மற்ற பாடங்களுக்கு, 205 ரூபாய்; மறுமதிப்பீடுக்கு, ஒவ்வொரு பாடத்துக்கும் தலா, 505 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என, தேர்வு துறை இயக்குனர், வசுந்தராதேவி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment