சென்னை:இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவில், இரண்டு நாட்களில், 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

தமிழகத்தில், அண்ணா பல்கலை இணைப்பில் செயல்படும், 550க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கு, ஒருங்கிணைந்த ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, மே, 2ல் துவங்கியது.தமிழக உயர்கல்வித் துறை சார்பில், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், கவுன்சிலிங்கை நடத்த உள்ளது. மாணவர்கள்,www.tneaonline.inஎன்ற, இணையதளத்தில் தங்கள் விபரங்களை பதிவு செய்யலாம்.
பதிவு செய்வதற்கான வழிமுறைகள், இணையதள முகவரியில் வழங்கப்பட்டுஉள்ளன.முதல் நாளான நேற்று முன்தினம் மாலை, 6:00 மணி வரை, 15 ஆயிரம் பேர் விண்ணப்பம் பதிவு செய்திருந்தனர். இரண்டாம் நாளான நேற்று, 9,000 பேர் விண்ணப்பம் பதிவு செய்தனர்.வரும், 31ம் தேதி வரை, விண்ணப்பங்களை பதிவு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.விண்ணப்ப பதிவுக்கான சந்தேகங்களை தீர்க்க, மாநிலம் முழுவதும், கவுன்சிலிங் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.