25ல், 'எய்ம்ஸ்' தேர்வு ஆபரணம் அணிய தடை

Image result for aiims

சென்னை, 'எய்ம்ஸ் நுழைவு தேர்வுக்கு வரும் போது, எந்த ஆபரணங்களையும் அணிய வேண்டாம்' என, மாணவ - மாணவியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.பிளஸ் 2 முடித்த மாணவர்கள், தேசிய மருத்துவ உயர் கல்வி நிறுவனமான, எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர, நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இந்த தேர்வு, நாடு முழுவதும், நாளை மறுநாள் நடக்கிறது.இந்த தேர்வுக்கு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.அதன் விபரம்:l தேர்வுக்கான, ஹால் டிக்கெட்டின் நகல் அல்லாத அசல் அச்சு பிரதியை, தேர்வறைக்கு எடுத்து வர வேண்டும்.l தேர்வுக்கு, சரியான நேரத்திற்கு வராவிட்டால், அனுமதிக்கப்பட மாட்டாதுl ஹால் டிக்கெட், அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படம் ஆகிய மூன்று மட்டுமே, தேர்வறைக்குள் அனுமதிக்கப்படும்.l

தேர்வுக்கு வருபவர்கள், வேறு எந்த பொருளையும் எடுத்து வரக்கூடாது. எந்தவிதமான ஆபரணங்களும் அணிந்து வரக்கூடாது. மின்னணு பொருட்கள் எதுவும் எடுத்து வரக்கூடாது. பேனா, பேப்பர் போன்றவைகளும் அனுமதிக்கப்படாது. தேர்வு மையத்தில், உடைமைகளை வைத்து கொள்ள, எந்த வசதியும் கிடையாதுl இந்த தேர்வு, கணினி அடிப்படையிலானது. மாதிரி தேர்வு வழியாக, தேர்வு முறையை முன்கூட்டியே தெரிந்திருக்க வேண்டும். விடை எழுதும் முன் பயன்படுத்த, 'ரப் ஷீட்' வழங்கப்படும். ஹால் டிக்கெட்டின் பின்பக்கத்தையும் பயன்படுத்தலாம். இரண்டையும் தேர்வு முடியும் போது, தேர்வறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்து விட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment