2,915 பள்ளி அங்கீகாரம்:

சென்னை : பள்ளி கல்வித்துறையின் அங்கீகாரம் கேட்டு, 2,915 பள்ளிகள் விண்ணப்பித்துள்ளன. தமிழக பள்ளி கல்வித்துறையில், நர்சரி, பிரைமரி மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு, தொடக்க கல்வி இயக்குனரகம் அங்கீகாரம் வழங்குகிறது. மெட்ரிக் பள்ளிகளுக்கு, மெட்ரிக் இயக்குனரகமும், மற்ற பள்ளிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குனரகமும், அங்கீகாரமும் வழங்குகின்றன.இந்த ஆண்டு முதல், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகத்தில், ஆன்லைன் அங்கீகார நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

இதன்படி, 2,915 பள்ளிகள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளன. இந்த பள்ளிகளில் நேரடி கள ஆய்வு நடத்தி, உள் கட்டமைப்புகளை உறுதி செய்ய வேண்டும் என, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, மெட்ரிக் இயக்குனர், கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment