பிளஸ் 2 மறு கூட்டல்: இன்று, 'ரிசல்ட்'சென்னை:தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:மார்ச்சில் நடந்த, 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்வுகள் மற்றும், பிளஸ் 1, அரியர் தேர்வுக்கான முடிவுகளுக்கு பின், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.மறு கூட்டல் கோரி, விண்ணப்பித்தோருக்கு, அதன் முடிவுகள், இன்று பகல், 2:00 மணிக்கு வெளியிடப்படுகின்றன.மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் பதிவெண்கள், scan.tndge.in என்ற, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அவர்கள், தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை,www.dge.tn.nic.in என்ற, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். பதிவு எண் இல்லாதவர்களுக்கு, மதிப்பெண் மாறவில்லை என, எடுத்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment