ஜூன் 3ல் பள்ளிகள் திறப்பு விடுமுறை நீட்டிப்பு இல்லை

சென்னை, 'கோடை விடுமுறை முடிந்து, திட்டமிட்டபடி, ஜூன், 3ல் பள்ளிகள் திறக்கப்படும்' என, பள்ளி கல்வி இயக்குனரகம்அறிவித்துள்ளது.இது குறித்து, பள்ளி கல்வி துறை இயக்குனர், ராமேஸ்வர முருகன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:வரும் கல்விஆண்டில், இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஏழு, எட்டு, பத்து மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, புதிய பாட திட்டம் அமலுக்கு வருகிறது.இது தொடர்பான, இலவச பாடப்புத்தகம், நோட்டு புத்தகம் மற்றும் இதர இலவச பொருட்களை, வரும், 24ம் தேதி முதல், 30ம் தேதிக்குள், பள்ளிகளுக்கு எடுத்துச் சென்று விட வேண்டும்.அவற்றை, பள்ளிகள் திறக்கப்படும், ஜூன், 3ம் தேதி அன்றே, மாணவ - மாணவியருக்கு வழங்கி விட வேண்டும். இதில், எந்த சுணக்கமும், இருக்கக் கூடாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.கோடை வெயில் கொளுத்துவதால், பள்ளி விடுமுறையை, நீட்டிக்குமாறு, அரசுக்கு சில ஆசிரியர் அமைப்புகள், கோரிக்கை விடுத்துள்ளன.ஆனால், திட்டமிட்ட தேதியில் பள்ளிகளைத் திறக்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.மேலும், 'புதியபாட திட்டம் அமலுக்கு வருவதால், நாட்களை வீணடிக்காமல், பாடம் நடத்தும் பணிகளைத் துவக்க வேண்டும்'என்றும், பள்ளி கல்வித் துறை அறிவுறுத்திஉள்ளது.

No comments:

Post a Comment