ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறப்பு

Image result for school reopenபுதுச்சேரி:புதுச்சேரியில் பள்ளி திறப்பு தேதியில் எந்த மாற்றமும் இல்லை, அறிவித்தபடி, ஜூன் 3ம் தேதி திறக்கப்படும் என, முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

லோக்சபா தேர்தலையொட்டி, இந்த ஆண்டு புதுச்சேரி அரசு பள்ளிகளுக்கு முன்கூட்டியே தேர்வுகள் முடிக்கப்பட்டு, கடந்த ஏப்., 12ம் தேதி விடுமுறை விடப்பட்டது. கோடை விடுமுறை 52 நாட்கள் விடப்பட்டு, ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என, புதுச்சேரி கல்வித்துறை அறிவித்தது.அதற்கேற்ப அரசு பொதுத்தேர்வு முடிகளும் விரைந்து வெளியிடப்பட்டது. ஏப்., 19ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவும், 29ம் தேதி பத்தாம் வகுப்பு மற்றும் மே 8ம் தேதி பிளஸ் 1 தேர்வு முடிவும் வெளியானது.பள்ளிகள் திறப்புக்கு குறைந்த நாட்களே உள்ள நிலையில், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், கோடை வெயில் 100 டிகிரிக்கு மேல் சுட்டெரிப்பதால், பள்ளி திறக்கும் நாள், கடந்த காலங்களைபோல் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் தள்ளிபோகலாம் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில், பள்ளி திறப்பில் எந்த மாற்றமும் இல்லை. அறிவித்தபடி ஜூன் 3ம் தேதி திறக்கப்படும் என, கல்வித்துறை அறிவித்துள்ளது.புதுச்சேரியில் பள்ளி திறப்பு குறித்து முதல்வர் நாராயணசாமியிடம் கேட்டபோது, 2019-2020 கல்வி ஆண்டிற்காக பாடத்திட்டங்களை முழுமையாக முடிக்க வேண்டியிருப்பதால் திட்டமிட்டபடி ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும், அதில் எந்த மாற்றமும் இல்லை என, தெரிவித்தார்.

No comments:

Post a Comment