சென்னை, ஆவின், பாலகம், தள்ளுபடி, உலக பால் தினம்


சென்னை : உலக பால் தினத்தையொட்டி, இன்று(ஜூன் 01) ஆவின் நிறுவனம், பால் பொருட்களுக்கு, 5 சதவீதம் சிறப்பு தள்ளுபடி அறிவித்துள்ளது.உலக பால் தினம், இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஆவின் நிறுவனம், விவசாயிகள், வாடிக்கையாளர்கள், விற்பனை முகவர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், மற்றும் ஆவின் ஊழியர்களுக்கு, வாழ்த்துக்கள் மற்றும் நன்றி தெரிவித்துள்ளது.மேலும், உலக பால் தினத்தையொட்டி, இன்று மட்டும், ஆவின் பாலகங்களில், பால் பொருட்களுக்கு, 5 சதவீதம் சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளது.