சென்னை : தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்க, 63 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.தமிழக இன்ஜினியரிங் கல்லுாரிகளில் சேர, உயர்கல்வி துறை சார்பில் ஒருங்கிணைந்த கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு, மே, 2ல் துவங்கியது. மே, 31 வரை பதிவு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.நேற்று வரை, 63 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளதாக, உயர்கல்வி துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் உயர்கல்வி துறையின், www.tneaonline.in என்ற இணையதளத்தில், இந்த பதிவுகளை மேற்கொள்ளலாம்.