அரசு வேலைக்காக 72 லட்சம் பேர் பதிவு

 அரசு வேலைக்காக 72 லட்சம் பேர் பதிவு


சென்னை, -அரசு வேலை கேட்டு, வேலைவாய்ப்பு அலுவலகத்தில், 72.85 லட்சம் பேர், தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில், ஏப்., 30 வரை, 72.85 லட்சம் பேர், அரசு வேலைக்காக பதிவு செய்துள்ளனர். 
இவர்களில், 16.64 லட்சம் பேர், 18 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள்; 17.50 லட்சம் பேர், 18 முதல், 23 வயது வரை உள்ள, கல்லுாரி மாணவர்கள்.இது தவிர, 24 முதல், 35 வயது வரை உள்ள, 27.30 லட்சம் பேர்; 36 முதல், 57 வயது வரை உள்ள, 11.34 லட்சம் பேர்; 57 வயதிற்கு மேற்பட்டோர், 6,906 பேரும், தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

பதிவுதாரர்களில், 188 பேர், முதுகலை சட்டம்; 198 பேர், முதுகலை கால்நடை மருத்துவம்; 549 பேர், முதுகலை வேளாண்மை; 752 பேர், மருத்துவ மேற்படிப்பு முடித்தவர்கள். முதுகலை ஆசிரியர்கள், 2.68 லட்சம்; முதுகலை கலை அறிவியல் பட்டதாரிகள், 1.21 லட்சம்; அறிவியல் பட்டதாரிகள், 1.36 லட்சம் பேரும் பதிந்துள்ளனர்.
மேலும், வணிகவியல் பட்டதாரிகள், 38 ஆயிரத்து, 187; முதுகலை பொறியியல் பட்டதாரிகள், 2.22 லட்சம் பேர்; முதுகலை இதர படிப்பு படித்தவர்கள், 2.20 லட்சம் பேர்; மாற்றுத் திறனாளிகள், 1.29 லட்சம் பேர், தங்கள் பெயர்களை, அரசு வேலைக்காக பதிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment