கால்நடை மருத்துவ படிப்பு 8ம் தேதி முதல் விண்ணப்பம்

சென்னை:சென்னையில் உள்ள, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள கல்லுாரிகளில், இளநிலை பட்டப் படிப்புகளில் சேர, 8ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் கீழ் செயல்படும், சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் உள்ள, கால்நடை மருத்துவக் கல்லுாரிகளில், கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப் படிப்புகளில், 360 இடங்கள் உள்ளன.
சென்னை, கொடுவல்லி உணவு மற்றும் பால்வள தொழில்நுட்பக் கல்லுாரியில், உணவு தொழில்நுட்ப பட்டப்படிப்பில், 40 இடங்கள் உள்ளன.பால்வள தொழில்நுட்ப பட்டப் படிப்பில், 20; ஓசூரில் உள்ள, கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லுாரியில், கோழியின தொழில்நுட்ப பட்டப் படிப்பில், 40 இடங்கள் உள்ளன.
இவற்றில் சேர, 8ம் தேதி முதல், ஜூன், 10 வரை, www.tanuvas.ac.in மற்றும் www2.tanuvas.ac.in இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, பதிவிறக்கம் செய்து, தகுந்த சான்றிதழ் நகல்களுடன், தலைவர், சேர்க்கைக் குழு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை, மாதவரம் பால்பண்ணை, சென்னை - 51 என்ற முகவரிக்கு, ஜூன், 10 மாலை, 5:45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
தர வரிசைப் பட்டியல், பல்கலை இணையதளத்தில், ஜூன், 10ல் வெளியிடப்படும். அயல்நாடு வாழ் இந்தியரின் குழந்தைகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, ஜூலை, 1க்குள் அனுப்ப வேண்டும். மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஜூலை, 9 முதல் நடக்கும்.

No comments:

Post a Comment