ஐ.டி.ஐ.,க்கு 'ஆன்லைன்' தேர்வு நிறுத்தம்

சென்னை:இந்தியா முழுவதும், ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு நடத்தப்படவிருந்த, 'ஆன்லைன்' தேர்வு நிறுத்தப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, ஐ.டி.ஐ.,க்களில் மெக்கானிக், பிட்டர், டர்னர் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்த மாணவர்களுக்கு, செய்முறை தேர்வுடன், எழுத்து தேர்வும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு முதல், எழுத்து தேர்வுகள், ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும் என, மத்திய திறன் மேம்பாடு மற்றும் பொது பயிற்சி இயக்குனரகம் உத்தரவிட்டிருந்தது.
இதற்கு, நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்தது. 'வெறும் எட்டாம் வகுப்பு மட்டுமே படித்து, ஐ.டி.ஐ., படிக்க வரும் மாணவர்களால், ஆன்லைனில் தேர்வு எழுதுவது கடினம்' என, ஐ.டி.ஐ., நிர்வாகிகள் தெரிவித்தனர். இதுகுறித்து, தமிழ்நாடு தனியார், ஐ.டி.ஐ., நிர்வாகிகள் சங்கத்தினர், சென்னை உயர் நீதிமன்றத்திலும், வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்நிலையில், 2018 ஆகஸ்டில் பயிற்சியில் சேர்ந்த மாணவர்களுக்கு, ஆன்லைன் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக, மத்திய திறன் மேம்பாட்டு துறை அறிவித்துள்ளது. ஆனால், 2019ல் சேர்ந்து, 2020ல் தேர்வு எழுதுபவர்கள், ஆன்லைன் தேர்வையே எழுத வேண்டும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment